நட்பு

என் உயிரினும் மேலான தோழனே ............!!!

இது கவிதை இல்லை
நான் நம் நட்பினால்
கோர்த்த பொன் மாலை.........

சின்னஞ்சிறு கதைகள்
பேசி உன் மடியில் உறங்க ஆசை.............

நீ
குடித்த பாதி
தேநீர் ருசி பார்க்க ஆசை .........

பவுர்ணமி இரவில்
உன்னோடு நிலாச்சோறு உன்ன ஆசை...........

வானம் போல்
விரிந்த உன் மனதில் எப்போதும் ஒரு நட்சத்திரமாய் இருக்க ஆசை..........

மலைப்பாம்பாய்
இருக்கிற தார் சாலையில் உன்னோடு ஒரு மிதிவண்டி பயணம் போக ஆசை.......

நீ
குட்டி குட்டியாய் போடும்
சண்டைகள் ஆசை .........

அந்த சண்டைக்கு
பின் வரும் சமாதானம்
ஆசையோ ஆசை...........

நீர் ஒழுகும் உன்
கண்ணை பார்க்க
என் கண்ணிலும் நீர் ஒழுக ஆசை ...........

சின்ன சின்னத்தை நீ
கூறும் பொய்கள்
எப்போதும் கேட்க ஆசை .........

விளையாட்டாக- நீ
செய்யும் குறும்புகள்
எப்போதும் பார்க்க ஆசை ............

வாழ்கிற காலமெல்லாம்
நம் நட்பு தொடர ஆசை...........

என் மரணம் இருக்க ஆசை ...............

அது உன் மடியில் நடக்க ஆசை ...............

எழுதியவர் : தீபிகா பழனியப்பன் (18-Jan-13, 2:30 pm)
Tanglish : natpu
பார்வை : 122

மேலே