எழுந்து வா ..
எழுந்துவா ..!
என்ன செய்தாய் ...
என்ன தவறு செய்தாய் ?
என்ன காரியம் செய்தாய் ?
என் தந்தையே ..!என் தந்தையே !...
இருப்பவர்க்கு கொடுத்தாயா ...
இல்லாதோருக்கு கொடுத்தாயா ...
இருந்ததெல்லாம் எங்கே ?
இழந்ததெல்லாம் எங்கே ?
என் தந்தையே ..!
நம் தங்கமான சொந்தமெல்லாம் அழுகிறதே
நம் வேர் குடும்ப சந்ததியெல்லாம் விழுதுகளாய் சுருண்டு அழுகிறதே ...
நம் பெயரன்கலேல்லாம் அழுகிற வேரை நினைத்து அழுகிறதே ஐயா ..
நம் கனவின் சந்தோசம் எங்கே போயிற்று ..
நம் கண்ணீரெல்லாம் எங்கே ஐயா ..
என் தந்தையே ...!
எம் கைகளில் பால் கிண்ணம்... துடிக்கிறேன்.. அழுகிறேன் ஐயா ...
எம் உள்ளம் குமுறுகிறது ...
எம் குழந்தைகள் கதறுகிறது ...
உம பால்மணம் மாறா பாசத்தினால்
உம காதுகளில் கேட்கவில்லையா ?..
என் தந்தையே ..!
எல்லோரும் அழுகிறார்கள் விழப் போகும் ஆல் மரத்தை நினைத்து ...
எல்லோருடனும் பேசு தந்தையே ...
எல்லோரும் பால் ஊற்றுகிறார்கள்
எல்லோரும் உம நினைவில் வாழுகிறார்கள்
என் தந்தையே
எழுந்துவா ..