பஞ்சமில்லைக்குப் பஞ்சமில்லை ...!

இங்கு
மரபு மாற்ற உணவுக்கு பஞ்சமில்லை
மனித உறவுக்குத்தான் பஞ்சம் ...!

இங்கு
கல்விச்சாலைக்கு பஞ்சமில்லை
குளிரூட்டிய அறையில்
அந்நிய மொழி ...!
பாக்கெட் பாலுக்கு பஞ்சமில்லை
தாய்ப்பாலுக்குத்தான் பஞ்சம் ...!

இங்கு
உற்பத்தி செய்யப்படும்
பொறியாளர்களுக்குப் பஞ்சமில்லை
உருவாக்கப்படும் பொறியாளர்களுக்குத் தான் பஞ்சம் ...!

இங்கு தன்னுடமை
அரசியல்வாதிக்குப் பஞ்சமில்லை
பொதுவுடைமை அரசியல்வாதிக்குத்தான் பஞ்சம் ...!

இங்கு அன்னிய முதலீட்டுக்குப் பஞ்சமில்லை
நம்மவர் முதலீட்டுக்குத்தான் பஞ்சம் ...!

இங்கு
கையில் புரளும் பணத்திற்குப் பஞ்சமில்லை
அதன் மதிப்புக்குத்தான் பஞ்சம் ...!

இங்கு பணம் வாங்கி
பிழைகளை விதைக்கும்
கைகளுக்குப் பஞ்சமில்லை
பிழைகளைத் திருத்தும்
கைகளுக்குத்தான் பஞ்சம் ...!
தேர்தலைச் சொன்னேன் ...!

மொத்தத்தில்
பஞ்சமில்லைக்குப் பஞ்சமில்லை
பஞ்சத்திற்குத் தான் பஞ்சம் ...!

எழுதியவர் : த.மலைமன்னன் (21-Jan-13, 4:03 pm)
பார்வை : 80

மேலே