எஞ்சி இருக்கும் ஈரம்.....................................
பல வீட்டுச்சோறு கண்டவன்
யாசகம் வேண்டுபவன்
இல்லை என்பதாலோ???????????????
இவன் விதியோ??????????????
இயற்கை நியதியோ??????????
இங்கோர் இல்லாதவன்
என்னைப் போன்றவன்
சாலையோரம் சாய்ந்திருக்கிறான்
எஜமான் வீட்டு நாயின்
பருக்கைகள்கூட எஞ்சவில்லை............
பெற்ற யாசகத்தில் ஓர் தானமாய்,
அவனுக்கு நான் இட்ட உணவு.........
பலபலக்கும் பாத்திரத்தோடு
நன்றிகள் நோக்கிய பார்வை
அவன் தட்டில் எஞ்சிய சாதம் போன்றே
இன்றைய சமுதாயத்தில்
எஞ்சி இருக்கும் ஈரம்..........................