நினைவுகள்

தாயின் மடிமீது தலைசாய்த்து உறங்கிய தருனங்கள்!!!
மண் தரையில் மன்டியிட்டு தவழ்ந்த தருனங்கள்!!!
பாத யாத்திரை போன பள்ளி பருவங்கள்!!!
பசி மறந்து விளையாடிய பருவ விளையாட்டுக்கள்!!!
ருசியறியாது கூட்டாஞ்சோறு உண்ட காலங்கள்!!!
கூட்டமாக சென்று குறும்பனை ஏறி நுங்கு வெட்டி,
நுங்கு சுளைகளினால் வயிறு நிறைத்து குட்டி
கிணற்றினிலே குட்டிக்கரணமடித்த காலங்கள்!!!
மரக்கிளைகளில் ஏறி குரங்கு போல் செய்த குட்டிச்சேட்டைகள்!!!
கண் இமைக்கும் நேரத்திற்குள் கானாமல் போன கல்லூரி காலங்கள்!!!
உலகம் மறைத்த காதல் நினைவுகள்!!!
நெஞ்சம் நெகிழ்ந்த திருவிழா கொண்டாட்டங்கள்!!!
மீண்டும் கிடைக்குமா? நாம் இழந்த இந்த பொற்காலங்கள்!!!
இவை யாவும் மீண்டும் கிடைக்காமல் போனாலும், வரும்
காலத்தை என்னி வாழ்வதை விட வாழ்ந்த காலத்தை
திரும்பிப்பார்ப்போம் நினைவுகள் இனிமையானது!!!!!!!

எழுதியவர் : சுப.செந்தில்நாதன், செங (23-Jan-13, 4:41 pm)
சேர்த்தது : செந்தில்நாதன்
Tanglish : ninaivukal
பார்வை : 195

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே