விடுதி

விடுதி நாட்கள் ...
எத்தனை எத்தனை
சுகமான நினைவுகள் !!
நடை ,உடை ,பேச்சு ,
பண்பு ,குணம் .தோற்றம்
என பல விதங்களில் வேறுபட்ட
"பூக்களின்" ஒருமித்த
சங்கமம் தான் விடுதி ...
பசிக்கும் முன்னே உணவு ..
படுத்து உறங்க பஞ்சணை..
தோள் கொடுக்க
தோழர்களின் கூட்டம் ...
தவறு செய்யும் போது
தட்டி கேட்க "வார்டன்" ..
சீனியரின் வழிகாட்டல் ..
ஜூனியரின் கொஞ்சல் ..
என்று அடுக்கி கொண்டே போகலாம்!!
விடுதியே..
எங்கள் வாழ்கையே
வண்ணமாக்க
வானவில்லையே
வாங்கி கொடுத்தது நீ தான் !!
எங்கள் அன்னையை விட்டு பிரிந்த
ஏக்கத்தை ஏணி படியாய்
மற்றியவளும் நீ தான்!!
நட்பின் ஆழத்தை
உணர வைத்தவளும் நீ தான் !!
"பொறுப்புகளை" கொடுத்து
புரட்சி நாயகியாய் மாற்ற
துடிப்பவளும் நீ தான் !!
வாழ்க்கையில் தவழ்ந்து
கொண்டிருந்த எங்களை
நடைப் பயில வைத்தவளே..
சிறகுகள் முளைத்து நாங்கள்
உன்னை விட்டு பிரிந்தாலும்
உன்னை மறக்க மாட்டோம்
எங்கள் உயிர் உள்ளவரை !!