என்னவளே ....?

மோனோசைட் முதல்
லிம்பொசைட் வரை
சீராய் பாய்கின்றது -என்
குருதி ஓட்டமண்டலம் ..

கார்பஸ்கலோசம் முதல்
செர்ரிபள்ளம் வரை
சிறப்பாய் இயங்குகின்றது -என்
மூளைப் பகுதிகள் .

நியுரான் முதல்
ஆக்சான் வரை
விரைவாய் கடத்துகின்றது -என்
நரம்பு மண்டலம் .

பெமூர் முதல்
ஆவில் வரை
பலமாய் இருக்கின்றது -என்
எலும்பு மண்டலம் .

வாய்க்குழி முதல்
மலப்புழை வரை
அலைவாய் இயங்குகின்றது -என்
உணவு மண்டலம் .

கார்னியா முதல்
விழித்திரை வரை
சரியாய் குவிகின்றது -என்
பார்வை மண்டலம் .

ஆரிக்கல் முதல்
வென்ரிக்கல் வரை
அளவாய் இயங்குகின்றது -என்
இதய மண்டலம் .

என்னவளே !
நீ ....
ஆயிரம் மருத்துவருக்கு சமமா ?
உன்
சிரிப்பு ...
ஐ நூறு மருந்துக்கடைக்கு சமமா ?

எழுதியவர் : ந ம கி (23-Jan-13, 9:05 pm)
பார்வை : 174

மேலே