வாழ்த்துகிறேன் அன்னையே உன்னை!

என் அன்பால் போற்றி
சிந்தையில் அதைத் தேற்றி
முத்துப் போல் கொத்துக் கொத்தாய்
வார்த்தைகளால் வாழ்த்துகிறேன்
என் அகிலமே உங்களை நான்.

விளக்கீட்டு விடுமுறையில் நிலா வீடு சென்றாலும்
என் அன்னையவள் முகம் தந்திடும் ஒளி.
எத்தனை யுகங்கள் ஓடி மறைந்தாலும்
எப்பொழுதும் உன் நினைவு எனக்கின்றி
வேறில்லையம்மா.

கருவில் நான் அழுதால்கூட
அக் கணமே உன் கண் கலங்கிடும்
உள்ளிருந்து நான் புரழும்போது
தன் உதிர்த்தை பாலாய் மாற்றி
உறவினர் காதினில் பசியால் என் மகன்
பதைக்கிறான் பார் என்பாயே.

அன்னையே உன் மடியில்
மீண்டும் ஒருமுறை கொஞ்சிவிளையாட
என்று வருவாய் என் அருகில்?......?
என்ற ஏக்கத்தோடு இருந்து வாழ்த்துகிறேன்
உன் பிறந்த தினத்தில் இன்னும் பல வருடம்
இப் பூமிதனில் வாழ்கவென.................
வாழ்த்தும் மகள்:-
என்.ஜனா

எழுதியவர் : என்.ஜனா (26-Jan-13, 4:52 am)
சேர்த்தது : என்.ஜனா
பார்வை : 161

மேலே