இன்னும் எத்தனை நாட்கள்
துக்கபொதிகளை தேக்கி வைக்க
சின்ன மனதிற்கு யார் உரைத்தார்?
தக்கசமயத்தில் தோள் கொடுத்துத்
துக்கம் மறைத்திட யார் வருவார்?
என் நாட்கள் அனைத்தும் இருட்டிலே!
பேசிய வார்த்தைகளோ இங்கு நெருப்பிலே!
தனிமையின் சாவென்னை அழைக்குதே!
அன்பு நினைவுகளை என்னுள் நிரப்புதே!
விழியெனும் ஓடை தீர்ந்ததே!
சோகம்,இமையோடு காதல் கொண்டதே!
செல்லும் வழிகளில் கேலிச் சிரிப்புகள்
பேதை உள்ளமோ,ஊமைப் பிறப்பிலே!
அதை புரிந்திட என்னிடம் யாருமில்லை
நெஞ்சம் அழுதாலும்,அணைத்திட கரங்களில்லை
வெள்ளைத் தாளும் இங்கே நனையுதே!
என் பேனா மையோ உருகுதே!
எத்தனை வருட சாபமோ?
என் வயதிற்கு இதுவும் ஏற்றதோ?
கணவனிடம் கண்ட என் கனவுகளை
தூக்கி எறிந்த காலனே!
இனம் புரியா சடங்குகளே!உங்களை
வரவேற்க என்னிடம் வலுவில்லை.
கண்ணீருக்கு,நான் என்றால் விருப்பமா?
வெள்ளை புடவையுடன் தான் என் வாழ்க்கையா?