விபத்தின் சறுக்கலில் வார்த்தைகள்
கண் விழித்து எழுந்தேன் அந்த காலையில்
கடமைகள் மெல்லத் துவங்கி செயல் கொண்டன
காரியம் புரிய விழைய வாகனம் துணைக் கொண்டு
காலைப் பனியின் சுவாசித்தில் சில்லிட்டு சிலிர்த்தேன்...
விதியின் படி சாலையில் செல்வதே சீர்த்து என்பதுவே
மதியின் துடி ஆரவாரமிட்டு மோதியதே முக்காலூர்ந்து
வீழ்வது தமிழல்ல நாமெனும் போதே வாயினுள்
ஒலித்தது பண்டைய செம்மொழி இகழ்பொருள்..
புழுதியும் குருதியுடன் சேர்ந்து சொட்டியது குருத்து
வினையின் சோதனை நடத்திட விருப்பமின்றி
விழாமல் வழுக்கியதாய் எழுந்த இளையமகனை
வாஞ்சையோடு துகள் துடைத்து தடை தெறித்தேனே...
மண்நீர் கொண்டு கசடுதனை விரட்டி துய்த்த தோலினில்
தீர்க்க மருந்திட்டு தேய்த்து சுகமிட்டு சுவாசத்தில்
ஆசுவாசமிட்டு களைப்பினை போக்கி
பணி செய்வோம் என புறப்பட்டதே என் சாணுடம்பு...
இவனுள் விழுந்த காயத்தின் சுவடினுள்
பிளவுகள் ஏதுமின்றி போகவே இதமான ஓய்வு
பெற்று காயச்சுவடுகளின் வலிகளை நீக்கிடவே
அறிவுறுத்திய மருத்துவன் இவன் காலுக்கு
மறதி கொண்டு மிதி விட்டான் சிறிய ஊர்தியை...
அவன் செயலுக்கு ஒப்பாமல் கிளம்ப மறுக்கவே
தன் தீரமுயற்சியை தொடர்ந்தும் ஒப்பேறவில்லை
இதன் மேல் தொடர மெல்லிய திசுக்கள் தங்களுள்
விலகிக்கொண்டு வலுவான வலிக்கொணரவே...
விளங்கியது செய்த காரியத்தின் வினை
ஒரு நடை வைத்திட திறணியற்றிடவே தேவையானது
தடையில்லா ஓய்வு அது மிகாவிடில் மோசமாகிவிடும்
நுண்திசு கோர்வைகள் என்கையால் இழைக்கோர்த்த
தடையிட்டு தவழ தடுமாறி தாமாக கால்கடிவாளமிட்ட
கணங்கள் இதுவேன்றாகியது இனி .....