இயற்கை அழகானது

அச்சம் எதுவும்மின்றி
உச்சி மலைமீது நான்
நீலவானம்,பசும்மலை
வெண்முகில் மெய்வருடும் தென்றல்காற்று
என எல்லோரும் இங்கிருக்க
எனை வரச் சொன்ன வானவில்லை காணலியே?
ம் ம் ம்
போதும் போதும்
ஒளிந்து விளையாடியது போதும்
ஓடிவா சிக்கிரமாய்
உனக்காய் ஒருபரிசுப்பொருள்
என் உள்ளங்கையில் காத்திருக்கு
இயற்கை அழகானது
இயற்கை தந்த வாழ்கை இனிதானது