விதியின் தலைப்பு
பச்சை பசுமையை கூட
வானம் நிரப்ப முடியாது
நீல வான மங்கையைக் கூட
பூமி மங்கை தொடவோ,அசைக்கவோ முடியாது
பறவைகள் கூட கால்கள் சிறகுகள்
இன்றி பறக்க முடியாது
மனிதனே ! கை கால்களிருந்தும் உன்னால்
பறவைகள் போல பறக்க முடியாது ....!
மழை நீரால் வந்த வாழ்க்கை கதையை
கடல் நீரால் தீர்க்க முடியாது
மலைப் பாறையைக் கூட
இரும்பைக் கொண்டு பிளக்க முடியாது
பனிப் பாறையைக் கூட துரும்பினால் கூட
நகர்த்த முடியாது ...!
விதியால் எழுதியதை கூட
கண்ணீரால் அழிக்க முடியாது
மதியால் எழுதியதை
தண்ணீரால் கூட அழிக்க முடியாது
கண்ணீரால் எழுதிய கதையை
செந்நீரால் கூட கழுவ முடியாது ..!
இவைதான் மெய்யோ ?
இவைதான் பொய்யோ ?
இதுதான் தீர்ப்போ ?
இறைவனுக்கு ...!!!