மோட்சத்தின் முகவரி

கண்களால்
வன்முறை வேண்டாம் ...
வா...
இதழ்கள் இணைத்து
முத்தம் பழகுவோம் ...

விரல்கள் பூட்டி
விருந்து களிப்போம் ...

ஆரத்தழுவி
அணைப்போம் காதல் தீயை ..!!

முனகளால் இசை எழுப்பி
காமத்தின் காது நிறைப்போம் ...

ஆசைகளின் வேர்வரை சென்று ..
ஆடை துறந்து..
மோட்சத்தின் முகவரி
கண்டு வருவோம் ...!!

உடல்கள் உரசி
உற்சாகம் தீப்பிடிக்க ..
சுகத்தின் சுவை அறிவோம் ...!!

பெருகும் இன்பத்தை
உருக ..உருக ரசிப்போம் ..
உனக்குள் என்னையும்
எனக்குள் உன்னையும்
தேடித்தேடி தொலைவோம் ...!

எல்லாம் மறந்துபோய் ...
பிறந்த குழந்தையாய் ..
தன்னிலை மறப்போம் ...
விண்வெளியில் பறப்போம் ...!!!

எழுதியவர் : அபிரேகா (28-Jan-13, 5:57 pm)
சேர்த்தது : abirekha
பார்வை : 85

மேலே