விளையாட்டு கல்யாணம்....

ஓர் இனிய காலைப்பொழுது...

இனிதாய் நடந்தது நம் திருமணம்...

அம்மி மிதிக்கவில்லை...

அருந்ததி பார்க்கவில்லை...

பெற்றோர் உற்றார் உறவினர்

வாழ்த்த வரவில்லை...

இருந்தும் நாம் வாழ்ந்து கொண்டுதான்

இருக்கின்றோம் நல்ல மணமக்களாய்

இவ்வுலகில்...

பசுமையான அந்த சிறுவயது

நினைவுகளுடன் இன்றும்...

எழுதியவர் : வேலூர் ஏழுமலை (28-Jan-13, 11:22 pm)
சேர்த்தது : Elumalai.A
பார்வை : 154

மேலே