குடித்து அழித்து விடாதீர்கள் ......

சிறு வயதில்
பசி அறியவில்லை
கவலை அறிந்தது இல்லை
இப்படி வளர்த்தார்கள் என் பெற்றோர்!

என் பதி மூன்று வயதில்
குடும்ப ஏழ்மை தாக்க
நடுக்கம் கண்ட என் அப்பா
அப்பாவின் நடுக்கத்தைப் போக்க
படிப்பை உதறிய அண்ணன்!

பத்து படித்த போதும்
அண்ணனின் தைரியம்
எவரிடத்தும் கண்டதில்லை இதுவரை நான்.
படிப்பில் என் அண்ணன் சளைத்தவனும் அல்ல
படிக்க பயந்தவனும் அல்ல..
அவன் படித்த காலங்களில் அவனுக்கே முதல் இடம் !

ஆயிரம் இடர்கள் எங்களை தாக்க
இடர்கள் அத்தனையும் ஏற்றுகொள்வாள்
என் அண்ணை என்ற தெய்வம் !

காலங்கள் உருண்டது
வறுமை இறுகியது
கடன் சுமையை குறைக்க
கடன் பெறப்பட்டது
ஓன்று இரண்டாய் கடன்களை அடைக்க
பத்து இருபதாய் கடன் கூடியது !

நன்றாக படித்தேன்
பள்ளியில் முதல் இடம்
பஞ்சாயத்தில் முதல் இடம்
பாராட்டுக்கள் ஆயிரம்
ஆனால் என் மனதில்
"அட கடவுளே
அந்த கடன் காரர்கள்
என் வீட்டு முற்றத்தில்
தினம் தினம் போட்ட கூச்சல்
இல்லை என்றால்
சில வேலை
மாநிலத்திலும் முதல் இடம் கிடைத்திருக்குமே(?)"

குடும்ப ஏழ்மை
என் கல்லூரி படிப்பை
ஒரு ஆண்டு நிறுத்தியது !
அண்ணனின் பங்கு
எங்கள் பசி அடக்க
அப்பாவின் பங்கு
எங்கள் கடன் அடைக்க
அம்மாவும் உழைத்தால்
இதரச் செலவுகளுக்கு!
தொடங்கியது என் உழைப்பு என்னும் அத்தியாயம்!

கடைகளில் நின்றேன்
பழைய பொருட்கள் வாங்கி விற்றேன்
பல அவமானம் பல இடங்களில் பெற்றேன்
ஆனாலும் அடங்க வில்லை என் உழைப்பு !

இடைவெளி விட்டு படிப்பை தொடர்ந்தேன்
இடைப்பட்ட நேரங்களில் சம்பாதித்தேன்
இடர்கள் அத்தனையும் என் அண்ணன் ஏற்றுக்கொண்டு
வாழ்க்கை கொடுத்தான் எனக்கு
நான் அவர்களுக்கு கொடுத்தது
என் கல்லூரியில் முதல் மாணவன் என்ற பெருமை !!!

படித்ததோ அரசு தொழில் கல்வி
அதவும் கணிப்பொறி பிரிவில்
கிடைத்த வேலையின் சம்பளம் 2500/-
நீ உன் வாழ்கையை பார் என்று
என்னை பிரித்து அனுப்பியது என் குடும்பம்
அழுகையுடன் பல எதிர்ப்பார்ப்புடன்
செய்தேன் கிடைத்த வேலையை !

மீண்டும் கிடைத்தது ஒரு வேலை
என் ஆசிரியர் என்னும் தெய்வத்தால்
இப்போது என் கைகளில் கிடைப்பது
பல ஆயிரம்.....

சொந்தங்கள் கைவிட்ட நேரத்திலும்
என் அண்ணனின் விட முயற்ச்சி
இப்போது அவனுக்கு என்று
ஒரு கடை ஒரு தொழில்

நாங்கள் சம்பாதிக்கிறோம்
கை நிறைய
ஆனாலும் வீட்டில் இல்லை சந்தோஷம்
காரணம் என் அப்பா !

ஆம் ஏழைகள் ஏழைகளாகவே
இருக்க காரணம்
மது என்ற அரக்கன் தான் !
இப்படி 23 வயதில் எனக்கு
தெரிந்த உண்மை
"நாங்கள் ஏழ்மை படக் காரணமே
என் தந்தையின் குடிப்பழக்கம் தான் !"

நாங்கள் பூமிக்கு வந்தது
உங்களை நம்பி தான்
ஆனால் எங்களை பெற்று எடுத்து விட்டு
நீங்கள் கொஞ்சு விளையாடுவது
அந்த மது என்னும் கொடியவனை தான் !
இப்போது புரிந்து கொள்ளுங்கள்
உங்கள் குடிப்பழக்கம் உங்களை
மெதுவாக கொல்லும்
ஆனால் என்னை போல் உள்ள
உங்கள் குழைந்தையின் எதிர்க் காலத்தை
அப்போதே கொன்று விடும் ....


நாங்கள் சாதிக்க பிறந்தவர்கள்
எங்களை சாதிக்க விடா விட்டலும்
எங்களை சந்தோசமாக வாழ விடுங்கள்

தந்தை குடித்தால் கெட்டுப்போவது
அவர் உடல் மட்டும் அல்ல
அந்த குடும்பத்தின் சகல சந்தோசமும் தான் !!!

இந்த வாழ்க்கை வரலாறு
எனது மட்டும் அல்ல
குடிப்பழக்கத்திற்கு அடிமையான
என் தந்தையைப்போல உள்ளவர்களின்
குழைந்தைகளின் வரலாறு

நான், என் அண்ணன் சாதித்தது
கடவுளின் ஆசிர்வாதத்தால்
எல்லோருக்கும் இது கிடைக்காது
தயவு செய்து குழைந்தைகளின் எதிர்க் காலத்தை
குடித்து அழித்து விடாதீர்கள் ......

எழுதியவர் : விக்கி (30-Jan-13, 1:34 pm)
சேர்த்தது : Vicky Vandiperiyar
பார்வை : 161

மேலே