நட்பின் சங்கிலி
![](https://eluthu.com/images/loading.gif)
புன்னகையில் தொடங்கும்..
நம் சந்திப்பு...
கை குலுக்கி..
தோள் தழுவி..
தழுவிய..
தோல்வி தொலைந்து...
கவலை மறந்து..
கூவிடுவோம்..
"நண்பா" என்று!!
மறந்த நாட்கள்...
மறைந்த ஆட்கள் என்று...
பிடித்தவன்..
பிடிக்காதவள் என்று...
யாவரையும் விசாரித்து..
சந்தோஷமும்..
சங்கடமும் கொள்வதே..
நட்பின் மனம்..
சந்தேகமில்லாமல்!!!
நொந்த காதல் முதல்..
வென்ற காதல் வரை...
அடி முதல்..
உதை வரை...
'அரியர்' முதல்...
'ஆல் க்ளியர்' வரை...
நண்பன் இறுதிவரை..
உறுதியாய்!!!
ஆயிரம் கரங்கள் மறைத்தும்...
ஆதவன்..
மறைவதில்லை...
நட்பும் அப்படியே...
பல்லாயிரம் முறை முறைத்தாலும்!!!
செல்போனிலும்..
இ-மெய்லிலும்...
ஆர்குட்டிலும்..
பேஸ்புக்கிலும்...
நட்பு குறைந்த..
சொந்தகளுக்கிடையில்..
மாமன்..
மாப்பிள்ளை..
மைத்துனன்..
சித்தப்பு என்று..
சொந்தம் கொண்டாடிடும்..
நட்பு!!
தாய்க்குப்பின்..
தாரமென்றாலும்...
இடையினம்..
நட்பொன்றின்றி இல்லை...
கலியுகத்தில்!!
கற்ப்பிருக்கும் நட்பு..
காலமும் கருவுறும்!!!
பந்தி முடிந்ததும்..
சொந்தங்கள் கடமை முறிக்க...
நட்பின் வட்டாரம் மட்டும்..
உள்ளுக்குள்..
ஆனந்தத்திலும்...
பிரிவாலும்...
விழி நனைக்கும்..
கருவுற்றது போல்!!!
நினைவு கூரும் சந்தர்ப்பம்..
நட்பின் சங்கிலியில்..
தேவையில்லை..
நட்பே-
நினைவின் சங்கிலி என்பதால்!!!