நட்பு வாசல்
எங்கோ செல்லும் நினைவுகளை
ஒன்றாய் சேர்த்து ஒருநிலையில்
அமர செய்யும் வாசல்..
யார் கதைத்தாலும் கண்களை
திறக்காமலே கனவிலே வாழச்
செய்யும் வகுப்பறை வாசல்...
என்ன நடந்தாலும் எத்தனை
வசவுகள் வாங்கினாலும் புன்னகை
மாறாத முக வாசல்...
எவ்வளவு வலித்தாலும் எதையும்
வெளிக்காட்டாமல் அத்தனை சீண்டல்களையும்
அழகாய் தள்ளிசெல்லும் வாசல் ....
எப்போதும் தொடர்பில் இருப்போம்
என்று சொல்லி ஊரையே விட்டுச்
செல்லும் விதியின் வாசல் ....
மீண்டும் சந்திக்கும் அந்தநாளில்
செவிவரை இதழும் விழியில்
செந்நீரும் பொங்கும் வாசல் ...
சொர்க்க வாசலைவிட சுகங்களை
அள்ளித் தெளித்து எங்கள்
குருதிக்கும் உயிர் திரட்டும் நட்பு வாசல்....!