கணிதம் கடினமானது அல்ல !?
எங்கள் ஊரில் உள்ள பள்ளியில் பயிலும் மாணவிகளில் ராதாவும் ஒருவள். நன்றாக படிக்க கூடியவள். ஆனாலும் , கணித பாடம் மட்டும் தேர்ச்சி பெறுவதற்கே திணறி வந்தாள். ஏழாம் வகுப்பு வரை கணித பாடத்தில் மிக குறைந்த மதிப்பெண்களே எடுத்த அவள் , எட்டாம் வகுப்பில் கணிதத்தில் முதல் மதிப்பெண் வாங்கும் அளவிற்கு முன்னேறிவிட்டாள். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500 க்கு 433 மதிப்பெண் பெற்றதோடு கணிதத்தில் 98 மதிப்பெண்கள் பெற்றாள். அதற்கு , அவளிடம் இருந்து பெறப்பட்ட பதில் :
தான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது - ஒரு நாள் , காலையில் தனது கணித ஆசிரியர் கார்த்திகேயன் , அனைத்து மாணவர்களையும் இயற்கணித பிரிவில் உள்ள (எ+பி)ஹோல் ஸ்கொயர் பார்முலா -வை கேட்க ஆரம்பித்து விட்டார் . முதல் நாள் நடத்திய பாடம்தான் என்றாலும் , இதுவரை அவர் இவ்வாறு கேட்காமல் இருந்ததால் , அன்று யாரும் அதை படிக்க வில்லை. இருப்பினும் கேள்விகள் தொடர்ந்தது . யாரும் பார்க்காத போது, ராதா மட்டும் தனது கணித புத்தகத்தை திறந்து அதன் விடையை பார்த்து விட்டாள். அவள் முறை வந்தது. சொல்ல வாய் எடுத்தாள். ஆனால் , ஆசிரியரோ - அதை கரும்பலகையில் எழுதுமாறு கூறினார் . அவள் எழுதிய அடுத்த நொடி , அவள் பாராட்டு மழையில் நனைந்தாள். கை தட்டல் பக்கத்து வகுப்பறையையும் தாண்டியது. தான் அன்று பெற்ற அந்த பாராட்டு தான் தன்னை கணித பாடத்தை விரும்பும் படி செய்ததாகவும் . அதன் பிறகு , எனக்கு எந்த கடினமும் கணிதத்தில் தெரியவில்லை. என் ஆசிரியர் அளித்த ஊக்கம் மட்டுமே தனது வெற்றிக்கு காரணம் என்றாள்.
அவள் இன்றும் கணிதத்தை விரும்பாத மாணவர்களுக்கு சொல்வது :
கணிதம் கடினமானது அல்ல !?