இடம் மாறிய மனம்......

கீதா டிபன் ரெடியா? பெரியவருக்கு டிபன் குடு. பாவம் அவரு சுகர் பேஷண்ட் டைமுக்கு சாப்பிடணும்" ரகு தன் மனைவியிடம் கூறினான்.

"சுகர் மட்டுமா இருக்கு.. வேற என்னென்ன வியாதி இருக்கோ. எப்பப்பார்த்தாலும் லொக்கு லொக்குன்னு இரும்பிகிட்டே இருக்கு அந்த கிழம். பேசாமல் எதாவது முதியோர் இல்லத்துல கொண்டு போயி விட்டுடுங்க."

” இன்னும் கொஞ்ச நாள்ள என் ஃப்ரெண்டு வந்து அவன் அப்பாவை கூட்டிட்டு போயிடுவான். அதுவரை கொஞ்சம் பொருமையா இரு"

இப்படி சொல்லி சொல்லியே ரெண்டு வருஷம் ஓடிடுச்சி எப்பத்தான் இது ஒழியுமே தெரியலை."

"மெதுவா பேசுடி அவர் காதுல விழப்போகுது. ஹால்ல தான் இருக்காரு "

இவர்கள் பேசியதெல்லாம் கேட்டு கண்ணீர் விட்டபடி தலைகுனிந்து சோபாவில் அம்ர்ந்திருந்தார் சோமு .

" அவளுக்கு கொஞ்சம் தலை வலி அதான்.....அந்த டென்ஷனை..... நீங்க ஒன்னும் தப்பா நினைக்காதிங்க" போலியாய் ஒரு அசட்டு சிரிப்பை வெளிப்படுத்தி சமாளித்தான் ரகு.

" பரவா இல்லை தம்பி. என்னை இவ்வளவு காலம் பொருத்திருந்ததே பெரிய விஷயம். என் மகன் சீக்கிரம் வந்து என்னை அமெரிக்காவுக்கு கூட்டிகிட்டுப்
போயிடுவான்.இன்னும் விசா வரலை அதான் லேட் ஆகுது."

" அதெல்லாம் சரிங்கய்யா. ரெண்டு வருஷமா உங்க மகன் உங்களை ஒரு முறை கூட வந்து பார்கலையே அதான் வருத்தமா இருக்கு. உங்க மூத்த மகன்.....”

”அந்த தருதலப்பத்தி பேசாதிங்க.... என்னை பொருத்தவரை அவன் செத்துட்டான்னு நான் தலைமுழுகி வருஷங்களாச்சி....சின்னவனுக்கு அலுவல் அதிகம். இல்லைன்னா என்ன பார்க்க வராமல் இருக்க மாட்டான். சின்ன வயசுல இருந்தே நான்னா அவனுக்கு உசுரு. இராத்திரியில என் மார்மேல ஏறி படுத்துக்குவான் கதை சொன்னால் தான் தூங்குவான். பெரியவனாகியும் என் மேல ரொம்ப மரியாதை. என் சொல்படியே எஞ்சினியரிங் முடித்து என் தங்கை மகளையே திருமணம் செய்து கொண்டான். ரொம்ப நல்லவன் நேத்துக்கூட போன் பண்ணான். ”இந்த மாசம் இந்தியாவுக்கு வரர்தா இருந்த புரோக்ராம் கேன்சல் ஆயிடுச்சிப்பா லீவு கிடைக்கலை. அடுத்த மாசம் வறேன்னு” சொன்னான். இன்னும் ஒரு மாசம் தானே அதுவரை நான் வேணும்னா முதியோர் இல்லத்துல இருந்துக்குறேன் தம்பி." என்றார் சோமு.

"சார் அப்படி எல்லாம் யோசிக்காதிங்க. அவ அப்படித்தான் அவ பேசினதை பெருசா நினைக்காதிங்க நீங்க சாப்ட்டு ரெஸ்ட் எடுங்க" என்று சொல்லி ஆபீசுக்குக் கிளம்பினான் ரகு.

சோமு மிகுந்த வேதனையுடன் முதியோர் இல்லம் தேடி நடக்கலானார். வழியில் திடீரென சோமுவின் தோளை ஒரு கை தட்டியது.

”சார் நீங்க சோமசுந்தரம் தானே? என்னைத்தெரியலையா? உங்க மகன் ராகவ் ஃப்ரெண்டு சதீஷ். நேத்து ராகவ்வ நம்ம சிட்டி சென்ட்டர்ல ல பார்த்தேன் குடும்பத்தோட 15 நாள் லீவுல வந்திருக்கான் போல.” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே சத்தீஷின் கைபேசி ஒலிக்க..
“ எக்ஸ்கியூஸ்மீ சார்” என்று சொல்லி நகர்ந்தான்.ஆனால் அவன் சொன்ன செய்தி நகராமல் சோமுவின் இதயத்தில் இடியாய் இறங்க மயங்கி விழுந்தார் சோமு.

கண்விழித்து பார்த்த போது அருகில் ஒரு குழந்தை தாத்தா! நீங்கதான் என் தாத்தாவா? அம்மா சொன்னா என்று கொஞ்சும் மழலையில் கேட்க சோமுவின் கண்கள் அருகிருந்த பெண் மேல் திரும்பியது “உங்களுக்கு என்னைத்தெரியாது மாமா ஆனா உங்களை போட்டோல பார்த்திருக்கேன். நான் தான் உங்க மூத்த மருமகள் ஃபாத்திமா! உங்களை எதிர்த்து பிரிஞ்சி வந்து நாங்க கல்யாணம் பண்ணிகிட்டாலும் தினம் தினம் உங்களையே நினைச்சி கவலை பட்டுகிட்டிருந்தோம். இனி எங்களோடவே இருந்திருங்க மாமா” என்று அவள் சொல்ல,.,,,அசல்ல, அதுவும் வேற மதத்துல பெண்ணெடுத்தா குடும்பத்தை பிரிச்சிடுவா” என்று சொல்லி அவர்களை வெறுத்து ஒதுக்கிய தன் அறியாமையை நினைத்து கண்கலங்கினார் சோமு.

எழுதியவர் : வெண்ணிலா (30-Jan-13, 10:19 pm)
Tanglish : idam maariya manam
பார்வை : 320

மேலே