ஏது பேதம்...

மலர்-
அழகாய் நான் இருப்பதுதான்
ஆபத்தைத் தருகிறது என்கிறார்கள்..

ஆனாலும்,
மலர்ந்தபின்பு நான்
மணக்கிறேன் மரணத்தை உணர்ந்தே,
மலர்ந்த முகத்துடன்..

அதனால்தான் நான்
பேதம் பார்ப்பதில்லை
பிணத்திற்கும்
மணமக்கள் கழுத்திற்கும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (31-Jan-13, 9:07 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 135

மேலே