என் முதல் கவிதை நீ

உன் விழிகள்
என்னை நோக்கிய
முதல் பார்வை,

உன் இதழ்கள்
என்னோடு உரையாடிய
முதல் வார்த்தை,

உன் கரங்கள்
என்னை பற்றிய
முதல் உணர்வு,

நீ என்னை ரசித்த
முதல் ரசிப்பு,

நீ என்னை சித்தரித்த
முதல் வருணிப்பு,

நீ என்னை இசைத்த
முதல் பாடல்,

நீ என்னில் பதித்த
முதல் முத்தம்,

நீ என்னில் உறங்கிய
முதல் உறக்கம்...

இவை,
நீ எனக்கு தந்த
முதல் கவிதை...

எழுதியவர் : தென்றல் இளவரசி (1-Feb-13, 9:01 am)
பார்வை : 306

மேலே