கன்னியின் (கவியின் ) காவியம்
ஆசை ஆசையாய்
இலட்சம் கனவுகள்
உனது தரிசனத்திற்கு
காலை முதல் மாலை வரை
எனது காத்திருப்புகள்
காலை கானமாய்
உன்குரலில் கண்விழிக்க
நினைக்கும் எனது ஆசைகள்
இனிய சொல் உன் உதட்டிலெனில்
உள்ளம் உவந்து கேட்க பிடிக்கும்
எனது உள் உணர்வுகள்
உன்னை கண்டால்
காதலுடன் கவிதையும் வரும்
உன் செயலை கண்டால்
சிரிப்பல்ல சிந்திக்கவும் தோன்றும்
உன் பார்வை பட்டால்
பரவசமல்ல பாவமும் விலகும்
உன் பேச்சை கேட்டால்
நீரூற்றல்ல தேனுற்றே வரும்
என்றென்றும் உன்னருகே நானிருந்தால்
சொல்வது எளிது
அருகில் வா உணர்த்துகிறேன்
உன்னுள்ளே
உன் கடைக்கண் பார்வைக்கு
ஏங்கும் கன்னியின் (கவியின் ) காவியம்