வலியின் ஒலி......
அம்மா! அம்மா என்று ஆயிரம்முறை
கதறிய வலியின் ஒலிதான் நீயும்
நானும்...
எத்தனை வலித்தாலும் மனமோ
மெய்யோ அனைத்தின் வலியின் ஒலியும்
அதுதான்..
என்றும் எதையும் நெஞ்சில் சுமக்க
போதிய வலுவில்லாத போதும் வலிக்கும்
ஒலிதான்...
மனதின் கதியும் மரணத்தின் சதியும்
சேர்ந்து உன்னை அழுத்தும்போதும் அதே
வலிதான்.