பிச்சைக்குழந்தை

சிலந்திக் கூடும் சிக்குத் தலையும்
போகி மழையில் எரியாத் துணியும்
தண்ணீர் என்பது குடிக்க மட்டுமென
மண்ணின் பிள்ளைகள் நின்ற பேருந்தில் !!
பச்சிளம் குழந்தை பிஞ்சுக் கைகளில்
பாலுண்டு நாளாக கண்களில் நீருடன்
உதவச் சொல்லி கால்களைத் தொடுகையில்
உள்ளம் உருகி சில்லறை சிதறும் !!
இறக்கம் கொண்டு தட்டில் இட்டால்
தட்டில் விழும் ஒற்றை ரூபாய்க்கு
இரண்டு ரூபாய் அடுத்த இலக்காகி
இவளின் பிள்ளையும் பிச்சை எடுக்கும் !!
முடிந்தால் பசியை ஆற்றுங்கள்
முடிந்தாலும் பிச்சை இடவேண்டாம் !!