kadhal payanam
"காகிதத்தில்
கிறுக்கியது கைகள்
உன் பெயரை,
உன்னை பார்த்த
சந்தோசத்தை
அனுபவித்தது மனசு"
"எல்லையற்ற மகிழ்ச்சியில்
மனம்
வானம் தாண்டி
பறந்து போகிறது
நீ அருகிலிருக்கும்
பொழுதுகளில்"
"பாசமான காதலை
பண்பான காதலனை
உயிரோடு ஒன்றிவிட்ட
என் பிரியமானவன்
என்னால்
வேதனைப்படும் பொழுதுகளில்
நான்
கண்ணீர் வடிக்கிறேன்
என் இதயத்தாலும்"
--