என்னை மறக்காதே ... உன்னை கெஞ்சி கேட்கிறேன் ...

பேசாதிருப்பது ஏன் - காதலை
சொல்லாதிரிப்பது ஏன்
காற்றை நிருத்துவதேன் – எந்தன்
சுவாசம் பறிப்பது ஏன்

கண்களில் காதலை வைத்து கொண்டு
பொய்யில் வாழ்வது ஏனடி
மனதில் காதலை வைத்து கொண்டு
சொல்ல மறுப்பதேனடி

பேசாதிருப்பது ஏன் ...
பேசாதிருப்பது ஏன் ...

என் அருகில் இருந்தவள் இருந்தவள்
என் மனதை பறித்தவள் பறித்தவள்
எனை என்றும் காத்திடும் ஓருயிர் நீதானே

எதோ தவரிளைதேன் – வார்த்தையில்
பிழையை செய்து விட்டேன்
வார்த்தை பிழை எண்ணி – ஏனோ நீ
காதலை மறந்துவிட்டாய்

உந்த விழி காணும் வரம்
கேட்டு தவம் இருந்தனே
விழி இன்றி எந்தன் வாழ்வில்
மொழி என்றும் இல்லையடி

பேசாதிருப்பது ஏன்
பேசாதிருப்பது ஏன்
சுவாசம் பறிப்பது ஏன் - எந்தன்
சுவாசம் பறிப்பது ஏன்

எனக்கென இங்கு இருப்பது நீயே
எனை ஆளும் தேவதை நீயே
எனை விட்டு விலகி போகாதே

என்றென்றும் மனம் தரும் தேனே
உன் அன்பில் வாழ்கிறேன் நானே
எனை விட்டு விலகி போகாதே

உயிரின்றி உடல் மட்டும்
தனியாக நடந்திடுமோ
இதளின்றி மலர்களும்
மலருமோ செடிகளில்

பேசாதிருப்பது ஏன் …..
பேசாதிருப்பது ஏன் …..

சுவாசம் பறிப்பது ஏன் - எந்தன்
சுவாசம் பறிப்பது ஏன்.

என் அருகில் இருந்தவள் இருந்தவள்
என் மனதை பறித்தவள் பறித்தவள்
எனை என்றும் காத்திடும் ஓருயிர் நீதானே

எழுதியவர் : சிவா அலங்காரம் (5-Feb-13, 11:11 am)
சேர்த்தது : சிவா அலங்காரம்
பார்வை : 310

மேலே