****உயிர்ப் பிணம்****

நொடிக்கு மூன்று முறை
இணையத்தைத் தொடும் நாம்
ஆண்டுக்கு ஒருமுறை
உறவுகளோடு இருக்கிறோமா?

அல்லல் படும் வாழ்வில்
ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறோமே..
ஒரு நாளுக்கு அரை மணிக்கூர் போதும்
உன் அன்பை வெளிப் படுத்த
அதை செய்கிறோமா?

இவ்வுலகில் இருவர் இருந்தால்
அனாதைகள் இல்லை...
ஆனால் இருக் குழைந்தைகள்
பெற்றும்...
சில பெற்றோர் அனாதை விடுதிகளில்!

ஏன் இந்த அவலம்
என்று சிந்திக்கும் சிலரும்
காலத்தின் விளையாட்டில்
சில பல தவறு செய்தவர்களே!

இவ்வுலகம் இப்படியே போனால்
யார் இதை சரி செய்வது?

மனித நேயம்
மனிதரிடத்தில் இல்லை!
மரண பயம் வரும் போது
திருந்தி என்னப் பயன்?

ஆருடம் கூறும் மானிட
செவி மடித்து இதை கேட்டுக்கொள்..
நீ பிறந்ததும் வளர்ந்ததும்
உன் ஒருவன் செயல் அல்ல
அதே போன்று தான்
உன் வாழ்கையும்!


பிறருக்கு உதவி செய்து
பிறரிடம் அன்புக் காட்டி
பிறரை நேசித்து வாழக் கற்றுக்கொள்!

ஏன் இந்த பிறவி
என்று ஏங்கி தவிக்கும் நீ
பல உயிர்களை கொன்று தான்
உன் தாயின் வயிற்றில் வந்தாய் !

அந்த உயிர்களுக்கு கிடைக்காத வாழ்க்கை
உனக்கு கிடைத்ததன் காரணம்
நீ இவ்வுலகில் சில உயிர்களுக்கு
நன்மை செய்வாய் என்பது தான் !

இதை உணர்ந்த சிலர்
பலர்க்கு உதவுவார்கள்!
இதை உணராத பலர்
தனக்கு தானே வாழ்ந்து இறப்பார்கள்!

இப்படி உணராமல் வாழ்ந்தால்
நாம் இன்றும் என்றும்
உயிருள்ள பிணங்களே!

எழுதியவர் : விக்கி (6-Feb-13, 1:01 pm)
சேர்த்தது : Vicky Vandiperiyar
பார்வை : 171

மேலே