தேய்ந்த ரேகைகளில் தெரியும் பிம்பங்கள் l

ஆதிகால மனிதனே ..!
கற்களையும் குச்சிகளையும் கற்றாய் ,,!
காட்டுலகை விட்டு சமவெளிகளுக்குச்சென்றாய் ..
உணவை உட்கொள்ளவேண்டி
ஊண் உயிராய் மாறினாய் ...
விதிகளையெல்லாம் மீறினாய் ...
இயற்கையின் விதிகளையும் மீறினாய் ...

உன் உழைப்பின் வரலாற்றையே சுவடுகளாக்கினாய்...
உன் அயரா உழைப்பே தொல்பொருள் ஆராய்ச்சியானது ....
கற்கருவிகளே உன் கைகளுக்கு சுவடுகளாய்...
உன் உருவத்திலும் முற்றிலும் மாறி நிமிர்ந்தாய்...

அன்று..!
உன் உழைப்பு நேரத்தை உணவுக்காக செலவாக்கினாய்..

இன்று..
உன் உழைப்பை
நேரம் தின்று கொண்டிருக்கிறது..

கடும் பனி கடும் குளிர் கடும் வெயில் கடும் காற்று இவைகளிலிருந்து ..
பாதுகாக்க சொந்த உலகத்தை கட்டினாய் ..

உதடுகள் அசைவதற்கு முன் உன் கைகள் பேசின..
உதடுகள் பேசுவதற்கு முன் உன் உடல் மொழிகள் பேசக் கற்றாய்...பின் உன்
உதடுகளுக்கு உயிர் கொடுத்து பேச்சுமொழி கற்றாய் ...

அம்பும் ஈட்டியும் உன் தோள்கள் ஆக்கினாய் ...
காட்டு விலங்குகளோடு வாழ்ந்த நீ
வீட்டு விலங்குகளோடு வாழ்ந்து பழகினாய்..

சுரங்கங்களும் கிணறுகளும் வெட்டினாய்...
வளர்ப்பு பிராணிகளோடு பயணம் செய்தாய் ..
உலகம் முழுதும் உழைப்பால் முன்னேறினாய்...

கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து வளர்ந்தாய்..
கூட்டம் போட்டு மனித இனத்தை வளர்த்தாய்...
உன் உழைப்பின் வரிகள் இன்றும்
உந்தன் தேய்ந்த விரல்களின் ரேகைகளில்
இன்றும் தெரிகின்றன பிம்பங்களாக ...!!!

(தோழர் 'இலக்கிய முரசு 'அகன் ஐயா அவர்கள் கொடுத்த தலைப்பின் வழி இயற்றப் பட்ட கவிதை )

எழுதியவர் : ஜெயா ராஜரெத்தினம் (7-Feb-13, 10:48 am)
பார்வை : 112

மேலே