^^^^^^^ நாகர்கோயில் ஜில்லா ^^^^^^^^^

நாகராசர் கோவிலாலே
--------வந்த பெயரிது - பல
நல்லோரை ஈன்றெடுத்த
--------நாஞ்சில் நாடிது ..........

குமரிமண்ணின் தலைநகராய்
--------நின்ற மண்ணிது - எம்
குமரிப்பெண்கள் அழகால் - உள்ளம்
--------வென்ற மண்ணிது ........

கவிமணியார் எம்மண்ணின்
--------கவிதை சாமியாம் - ஐயா
செய்குத்தம்பி பாவலர் - தமிழ்
--------செய்த பூமியாம் ....................

நகைச்சுவையில் நல்கருத்து
--------நவின்ற மனிதனாம் - வள்ளல்
கலைவாணர் இம்மண்ணின்
--------கலைப் புதல்வனாம் ..............

காமராசர் தேர்தல்களம்
--------கண்டே நின்றார் - அந்த
கர்மவீரர் கடைசிவரை
--------வென்றே நின்றார் .............

கல்வியறிவில் முதலிடமே
--------நாளும் கொண்டோம் - என்றும்
கலைகளிலும் நல்லதேர்ச்சி
--------நாங்கள் கண்டோம் ...........

பசியென்றால் சோறுபோடும்
--------பண்பும் உண்டு - பெரும்
பகைவந்தால் கூறுபோடும்
--------வம்பும் உண்டு.......

பெண்கல்வி பெருகக்கண்ட
--------பெருமையும் உண்டு - பலர்
வாக்களிக்க வருகைதரா
--------சிறுமையும் உண்டு........

ஆறுகுளம், குட்டையென
--------அழகு கொண்டவூர் - இன்று
நீர்நிலைகள் வற்றிவறண்ட
--------நிலங்கள் ஆனது ..............

வயல்வெளிகள் மலைகளென
--------வளம்கொழித்த மண் - இன்று
மனைகளாக மாறக்கண்டு
--------மனம் துடிக்குது........

நாகராசர் கோவிலாலே
--------வந்த பெயரிது - இன்று
நகரமயம் ஆனதனால்
--------நரகம் ஆனது .........................................

எழுதியவர் : ஈஸ்வர் தனிக்காட்டுராஜா..... (7-Feb-13, 12:48 pm)
பார்வை : 286

மேலே