விஸ்வரூபம் !

விஸ்வரூபம் திரைப்படம்
விஸ்வரூபமாக எழுந்த சர்ச்சை
மதங்கள் நேசிக்கப்படுவதில்லை
மாறாக சோதிக்கபடுகிறது
தீவிரவாத முத்திரைகள் இங்கே
மதங்களுக்கு சூட்டபடுகிறது
சினிமா மக்களின் மனதில் இன்னும்
மாற்றங்களை தரவேண்டும்
மாறுபடுத்தி மனதை வேறுபடுத்த
கையாளும் தொழில்நுட்பம்
ஆஸ்கார் விருதுக்கும் ஹாலிவுட்
தரத்திற்கும் ஆசைபடுவது தொழில் வெறி
மதங்களை நேசிக்கும்போது -அங்கே
நல்ல மனிதன் கிடைத்துவிடுவான்
கோடிகளை கொட்டி திரைப்படம் -அனால்
மனிதனின் நாடித்துடிப்பு மதம்
இன்னும் அதிகமாக மதங்களை நேசியுங்கள்
மனிதன் மனிதனாக இருப்பான்
விஸ்வரூபம் போல் இனி வேண்டாம்
உண்மை "ரூபமாக " என்றும் இருப்போம் !
-ஸ்ரீவை.காதர் -