கானா பாடுவேன்

என் முதல் கானா பாடல்
கானா பாடுவேன்
நா கவிதை எழுதுவேன்
இப்போ தான பாடி
தெருவில் திரியிறேன்...
தமிழ் மட்டும் தான்
எனக்கு சொந்தம் தானங்க...
மத்ததெல்லாம்
எனக்கு யுத்தம் தானங்க ....
ஆங்கில அறிவு
அட அறவே இல்லங்க...
அதனால அசிங்கப்பட்ட
தமிழன் நானங்க....
கல்வி கற்க தான்
கோவை வந்தேங்க...
வந்த இடத்துல காதலாகி
எந்தன் வாழ்கை கந்தலாகி
இப்போ...
நா காண படுறேன்
தெருவில் திரியிறேன்...
அரை வயிறு தான்...
கழுவ முடியல...
ஆனாலும் பசிய போக்க தான்...
வழியும் தெரியல...
உழைப்பு ஒண்ணு தாங்க
உங்களை உயர்வாக்கும்ங்க...
தோல்வி கண்டதால
நீங்க தோக்க போறதில்லை...
வெற்றி வரும் நாளை
ஊரு கொண்டு வரும் மாலை...
அப்போ ....
வெற்றி வரும் நாளை
ஊரு கொண்டு வரும் மாலை...
அந்நிய மொழிய தூக்கி போடு...
அன்னை மொழிய துதி பாடு...
கானா படுவேன்...
நா கவிதை எழுதுவேன்....
இப்போ காண பாடி
தெருவில் திரியிறன்....