காதல் யோகி

உன் பிம்பத்தை சுமப்பதனால் தானோ
இந்த உலகம் என் கண்களுக்கு அழகாய் தோன்றுகிறது

உன்னையே நினைப்பதால் தானோ
நானும் காதல் யோகி ஆனேன் .

உன்னை போல் ஒருத்தியை காண்பதால் தானோ
எனக்கு அந்த ஒருத்தியையும் பிடித்துள்ளது.(சரி சரி இது கற்பனை முறைக்காதே )

உன் விழிகள் வருடியதால் தானோ
என் கன்னம் சிவந்தது.

உன்னை நினைத்த நானே இப்படி கவிதை எழுதிகிறேனே
பாவம் அந்த பிரம்மன் உன்னை படைத்தவன்
இந்நேரம் பிரம்மலோகத்தில் பேப்பர் பஞ்சம் வந்து இருக்கும்

எழுதியவர் : sakthivel (9-Feb-13, 4:11 pm)
பார்வை : 125

மேலே