காதலில் ஆழங்கள்

காதலில் தோற்காவிடில்...
ஆழங்கள் அறிவதில்லையோ...
கிறுக்கலாய் என்கவிதைகள்...
கிளிஞ்சலாய் மாற்றிப் போகிறாய்...

நானும் தான் அழவில்லையா?
கண்ணீர்தான் மெய்யின் தொல்லையா?
நெஞ்சத்தில் ஈரப் பஞ்சு போல்...
எடைதரும் உன் நட்பின் அன்புதான்....

காகிதப்பூக்கள் வாசத்தை
காற்றும் தான் அறிவதில்லையா?
பூச்சாடி வாடித்தீர்ந்ததோ...
காற்றாடி... கவிழ்ந்து வீழ்ந்ததோ...

சொல்லாமல் நான் போகிறேன்...
திசைகளே இல்லா பாதையில்...


ஆண்டுகள் கரையுமில்லையா...?
என் நினைவு உனக்குத் தொல்லையா...
அன்றெனை நீ வெறுக்கவில்லையா...

எழுதியவர் : சக்திவேல் (9-Feb-13, 3:55 pm)
சேர்த்தது : சக்திவேல்
பார்வை : 119

மேலே