சில சினிமாக்களும் கலைவிபச்சாரமும்

யதார்த்தம் என்ற பெயரில் நடந்த உண்மைகளை காட்டுவதாக சில சினிமாக்கள் சமுதாயத்தில் பல சங்கடங்கள் விளைவிக்கிறது
அழகையும் உடல் வனப்பையும் காட்டி விபச்சாரம் செய்யும் விலைமாதர்களுக்கும் கொஞ்சம் கலைநயத்தையும் புதிய தொழில் நுட்பத்தையும் காட்டி சமுதாயத்தில் நடந்த கொலை கொள்ளைகள் கற்பழிப்புகள் பாலியல் வன்கொடுமைகள் அடிதடி,மதக்கலவரங்கள்,மனிதநேயமற்ற செயல்கள்,தீவிரவாதங்கள்...
இப்படி சமுதாய அவலங்களை காட்டி மறந்திருந்த கொடூரங்களை மீண்டும் மீண்டும் பல ரூபங்களில் காட்டி உலகத்தரம் என்ற முத்திரை குத்தி....பணம் ஒன்றே குறிக்கோளுடன் விலைமாதர்களாக சினிமா கலையை விபச்சாரம் செய்கிறார்கள்

இது மேற்கத்திய நாடுகளில் அதிலும் அமெரிக்கா...ஹோலிவுட் படங்களில்இருந்தன அதன் பயனை அவர்கள் இன்று அனுபவிக்கிறார்கள் இன்று உலகில் அதிக துப்பாக்கி கலாச்சாரம் பள்ளிகளில்..பார்க்குகளில்..திரையரங்குகளில் நடப்பது மேற்கத்திய நாடுகளில்தான்

அதே அழிவு கலாச்சாரத்தை விதைகளாக சில சினிமாக்கள் விதைத்துக் கொண்டு போகின்றன ஒரு உண்மை சம்பவத்தை எடுத்துக்கொண்டு அதற்கு கண்,காது,முகம்,வைத்து கொடூரமாக மீண்டும் திரையில் சினிமா என்றரூபத்தில் அலையவிடுகிரார்கள்
சினிமா நடிகர்கள் தாங்கள் கடவுளின் அவதாரங்களாகக் காட்டிக்கொண்டு மதவாதிகள் (எந்த மதம்? என்று இல்லை! எல்லா மதங்களுமே!) செய்யும் கொடூரங்களைவிட அதிகம் செய்கிறார்கள்

தனக்கு என்று ஒரு கூட்டம் சேர்க்கிறார்கள் அப்பாவி இளைஞர்கள் விட்டில் பூசிகளாய் அதில் விழுந்து மாய்கிறார்கள்
நானும் என் (19) இளம் வயதில் ரஜினிகாந்த் நடிகருக்கு அவருடைய சிகரெட் பிடிக்கும் ஸ்டைலில் மயங்கி அந்த பழக்கத்திலிருந்து விடுபடுவதற்குள் பெரிய அவஸ்தைப் பட்டேன்..இன்று அவரும் அவஸ்தைப்பட்டு புகைக்காதீர்கள் என்று வேண்டுகிறார்

கமலஹாசன் என்ற மாபெரும் கலைஞனை கடவுளாக கொண்டாடினேன் 16-வயதினிலே படம் எத்தனை முறை பார்த்தேன் என்று ஞாபகமில்லை படிக்க அப்பா அனுப்பிய காசை படம் பார்த்தே அழித்தேன்..இது எப்படி இருக்கு?..என்ற ரஜினியின் பஞ்ச் டயலாக் அன்று எனது திருமந்திரமாகிறது ...இன்று அவர்களுக்கும் வயதாகிவிட்டது எனக்கும்தான் இன்று வயது ஆகிவிட்டது இப்போதுதான் அறிவு வருகிறது...வந்திருக்கிறது..
என்று அல்ல! என்றைக்கு தனிமனிதனாக உழைத்து உன்னவேண்டும் என்ற அறிவு 23-வயதில் வந்ததோ அன்றே எதன் மீதும் அதீத பக்தி ஆபத்து என்ற பகுத்தறிவும் வந்ததோ அன்றிலிருந்து....

என் உயிரிலும் மேலான (சினிமாவிலும் இப்படித்தான் ஆரம்பிக்கிறார்கள்) இளைய தலைமுறையே.....
சினிமா சினிமாவாக இருக்கட்டும்...சமுதாயத்தை சீரழிக்கும் ச்சீ...னிமா நமக்கு வேண்டாம்
அது எந்த ரூபத்தில் வந்தாலும் எதிர்த்து நிற்போம்
(இந்த கட்டுரைக்கு உங்கள் ஆதரவைப் பொறுத்து சமுதாயத்தை சீரழிக்கும் சினிமாக்களை நானும் எழுத்து தளத்தில் என் எழுத்துக்களால் அவ்வப்போது படம் காட்ட நினைத்துள்ளேன்)

......................பரிதி.முத்துராசன்

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (9-Feb-13, 5:53 pm)
பார்வை : 183

சிறந்த கட்டுரைகள்

மேலே