ஒரு 19 வயது இளைஞனின் புலம்பல் இது!!

இலவசம்!! இலவசம்!! இலவசம்!!
ஏன்?? எதற்கு?? எப்படி?? என்ற எந்த கேள்வியும் எழுவதில்லை.. கொடுதால் போதும் பெற்று கொள்கிறோம் முந்தியடித்து!!
இலவசதிற்காக போட்டோம் ஓட்டு!! போனது ஒரு லட்சம் கோடி!! நாம் நினைப்பது, அது என் பணமா என்று.. ஆனால் அது உன் இரத்தால் கட்டிய வரி. மறைமுக வரி என்னும் அட்டையால் வலிக்காமல் உரிகிரார்கள் உன் பணத்தை நாளும்..
ஒரு தமிழனை காப்பதாக கூறி, இன்னொரு தமிழன் ஆட்சியை பிடிக்க பார்கிறான்.. உலக தமிழ் மாநாடு இங்கே, தமிழன் மடிகிறான் அங்கே.. துரோகம் இளைத்தான் ஒரு தமிழன் இன்னொரு தமிழனுக்கு!!
மீண்டும் இலவசம்!! இலவசம்!! இலவசம்!!
போட்டோம் ஓட்டு!! பெற்றோம் இருட்டு!! இது நல்லட்சிக்காக நாம் போட்ட ஓட்டு அல்ல..நாத்தம் பிடித்த ஆட்சியை மாற்றவே!! ஆனால் அதை விட நாறுகிறதே இது..மீண்டும் நாம் என்ன செய்ய போகிறோம்??, அந்த நாற்றமே பாரவாயில்லை என்று பழைய நாற்றத்தை கொண்டு வருவோம்...இதை தவிர நாம் செய்ய போவது ஒன்றும் இல்லை..
தமிழர்கள் நிச்சயம் கலை நயம் மிக்கவர்கள் என்பதை நாம் உறுதி படுத்தி உள்ளோம்... வெள்ளித் திரையில் நல்லவர்களாக நடிப்பவர்களை நம் உள்ள திரையில் ஆச்சியாளர்களாக தேர்வு செய்கிறோம்..
கல்விக்கு கண் கொடுத்தவரையே நிராகரித்தீர்கள்!! கல்லுக்கு கண் கொடுத்தவனை ஆதரீத்தீர்கள்!!
பன்னாட்டு தமிழ் பிரச்சனை தீர்க்க செல்கிராய்.. உன் நாட்டு பிரச்சனை மறக்கிறாய்.. உன் சகோதரனுக்கு வந்த வாழ்வுரிமை பிரச்சனை உன் நாட்டில் வருவதர்க்கு வெகு தூரம் இல்லை.. இவ்வாரு நீ காசுக்காக கைத்தட்டினாள்..
நீ நிச்சயம் தமிழன் அல்ல!! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவன் தமிழன் என்றால்!! நான் தமிழ்ந்தான் என்று நீ சொன்னால், அன்று இருந்தவன் தமிழனாக இருந்து இருக்க முடியது!!
இன்றையளவும் நீ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் செய்த தமிழனின் சாதனைகளையும், வீரத்தையும் கூறியே பெருமைப்பட்டு கொள்கிறாய்.. ஆனால் இன்றைய தமிழனாய் நீ செய்த அரும் சாதனை என்ன என்று எண்ணிப்பார்.. பதில் என்னவோ கேள்வி குறிதான்!!
நான் உன்னை கேலி செய்யவில்லை..கேள்வி கேள் என்று தான் சொல்கிறேன்..
எப்போது நீ இன, மத வேறுபாடுயின்றி மனிதனை மனிதனாக பார்க்கிறாயோ..
பதவிக்காக அரசியல் செய்யும் அரசியல்வாதியை புறக்கனிக்கிறாயோ அன்று நீ புரிவாய் சாதனை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழனின் சாதனையினை மிஞ்சும் அளவுக்கு!!
இதை புரிந்தவன் ஏற்பான்..புரியாதவன் தூற்றுவான் என்னை!!

எழுதியவர் : முரளிதரன் செங்கோடன் (10-Feb-13, 11:31 pm)
பார்வை : 142

மேலே