உமிழி நீர்
பல்லாண்டு போராட்டம் ஓய்ந்தது
அடிமையுற்ற ஓர் தேசத்தின் சுதந்திரம் கன்டீர்
இரு தேசமாய் பிளவிட்டு!!
படை கண்டு மிரண்ட மன்னன்(ஹரிசிங்)
அவனை பாதுகாத்துக் கொள்ள
எங்களை பனயர்களாக்கி பாரதத்துடன் இணைத்தான்..
போரிட்டீர் எங்கள் பூமியை பங்கிட
ஆகாசி சின் சீனமானது...
அன்டைப் பகுதி ஆசாத் கசுமீர் ஆனது..
மிச்ச பகுதியை வைத்துக்கொண்டு
மொத்த பகுதியையும் பாரதம் என்றீர் நீங்கள்(இங்திய அரசு)...
சகோதரர்களை சகதியில் இருந்து மீட்கிறோம்
என்று உரைத்து மேற்கில் முளைத்தீர் (Pak)..
சாந்த பனி பிரதேசத்தை ஆயுதங்களின் சரணாலயமாக்கினீர்!!
வாழ்வதற்கு உரிமை கோருகிறோம் நாங்கள்;
எங்கள் பூமியை உரிமை கோருகின்றீர் நீங்கள்..
காலம் உருண்டாலும் உங்கள் கடவு எண்ணம் மாறவில்லை
கண்டீர் இரத்த வெள்ளம்.கார்கில் போரில்
ஓடிய உதிரமும் உதிர்ந்த உயிரும் உங்களது(Ind & Pak) மட்டுமல்ல
அந்த மண்ணில் மலர்ந்த எங்களுடையதும் தான்...
உங்களுகுள்(Ind & Pak) வைக்கும் தோட்டாக்களின் குறிக்கு
எங்கள் உயிர் இறையானது
பூலோகதின் சொர்க்கம் என்று புகழப்பட்ட இடம்
அனைவரும் வர அஞ்சும் ஆபத்தான நரகமானது!!
கொஞ்சும் மொழி பேசும் எங்கள் குழந்தைகளின்
நெஞ்சில் நஞ்சை விதைத்தீர்; பிறர் தீண்டா
வாழ்ந்தோரை தீவிரவாதிகளாக மாற்றினீர்.
அமைதியை நாட்ட வந்த ஐக்கிய நாடுகள் சபை (UN Assembly)
ஆழம் தெரியாமல் காலை விட்டோம்
என புற முதுகிட்டது…
வல்லரசு நாங்கள் என வாதாடும்
ஒற்றுமை தேசம் (USA) உங்களின்(Ind & Pak) ஒற்றுமையை
ஒலிக்கவே பாடுபடுகிறது.
வளர்சிக்கான பணம் என்று கூறி (US welfare Fund)
ஒரு நாட்டின் தீவிரவாத உணர்ச்சியை
தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கின்றது.
உங்கள் மூவர்ண கொடி எங்களை
தரம் பார்த்து புறம் தள்ளியது
உங்களுள் ஒருவன் என்று கூறினீர் - ஆனால்
எங்களுக்கு தனி கொடி(J&K flag) பறக்க விட்டீர்.
வேலியே பயிரை உண்பதுப் போல
உங்களின்(Indian Army) காக்க வந்தப் படை – எங்கள்
இல்லப் பெண்டீரை பாலியல் பொம்மையாக்கியது!!
எங்கள் மண்ணை கவர நீங்கள்(Ind, Pak & China) போடும் போட்டி
எங்களை வாழ வைப்பதற்க்காக இல்லை
உங்களின் பலத்தை பரிசோதிப்பதற்காக மட்டுமே...
எம்மத தெய்வமும், வேறு எந்த மத தெய்வமும்
காக்கவில்லை எங்களை – ஆனால் மத பெயரில்
ஒட விட்டீர் எங்கள் உதிரத்தை இந்த பூமியில்!!
என் புண்னிய பூமியை,
பகடையின் பந்தயப் பொருள் போல ஆக்கினீர்!
உங்கள் வீரத்தை மெட்சிக்கும் போர்க்களமாக்கினீர்!!
பொழுது கழியாத உங்களுக்கு நாங்கள் பொம்மைப்
பொருளாகினோம்...
நாங்கள் சொகுசு வாழ்க்கையை நாடவில்லை...
நித்திறையின் நிசப்தம் போல்
நிம்மதியான வாழ்க்கையை தொலைத்து விட்டு
தேடுகிறோம்...
பன்னீராக இருந்த மண்ணை தண்ணீராக மாற்றினீர்
நன்ணீராக தோன்றிய தாய் மண்ணை உப்பு நிராக்கினீர்
அந்த உப்பு நீரை துப்பினீர் – எங்கள் முகத்தில்
“ உமிழி நீராக......”
விடியல் தேடி விழிக்கிறோம்..
இனும் விடை கிடைக்கவில்லை...