கிறுக்கல்கள்,,,,
பிழைக் கிறுக்கல்கள்,,,,
பிழைக் கிறுக்கல்கள்,,,,
உணர்வுக்கூட்டில்
உதிரிய மயிலிறகு
என் கவிதைகள்
இறப்புக் காவியங்களுக்கு
மறதிக் கவிதைகளில்லா
மரபுக்காதலின்
இலக்கணமறியா
புதுக்கவிதைகளிது,,,
மழைத் துளிகளில்
சிறகடித்து துடிக்கும்
சிட்டுக் குருவிகளின்
தவிப்புகளறியா
குழந்தைக் கவியின்
பாவ உணர்வுகள்
என் ஆனா ஆவன்னா
திருடப்பட்ட எண்ணக்குவியலின்
எண்ணிக்கையில்லா நட்சத்திரக்
கனவு கூடாரம்,, அதிலும் கற்பனை
வாஞ்சைகளில்லை ,, அனைத்தும்
உடைந்த சிற்பங்களே,,மனிதமனங்கள்
பிழைக்கவிஞன் இயற்றும்
உவமைகளில்லா உபரிக்கவிதைகள்
மண்சுவற்றின் மேலே வெறுமனே
மூடப்பட்ட தென்னங்கீற்றின்
ஓலைக்கூரைகளாய் ,,,,
அறுபட்டாலும் அதற்கிடையில்
விடிவெள்ளியாய் நிலாமாகள்