தேன் மழையே நீ வருக.....!

தேன் மழையே நீ வருக.....!
சில்லெனும் மழையே
சொல்லுன் விலையே
சேரியில் ஏழ்மை
செழித்தே வளருது....!

கர்ப்பம் தாங்கவே
கழனிக்கு திறன் கொடு
காலமும் மகிழவே
கருணையை நீ கொடு...!

காயிதக் கப்பல் நானும்
கட்டி வெகு நாளாச்சி
தொட்டு பிடிச்சி விளையாட
நதி மத்தி தோதாச்சி.....!

வியர்வையில் குளிச்சே
விளையாண்டு வாடுறேன்
விருப்பமாய் அழைக்கிறேன்
விரைந்தே வா தேன் மழையே ...!

எழுதியவர் : சக்திவேல் (11-Feb-13, 3:08 pm)
சேர்த்தது : சக்திவேல்
பார்வை : 80

மேலே