என் காதலை சொல்ல...
என் காதலை சொல்ல...
ஒரு காதலர் தினத்தில்
ரோஜா கொடுத்து
பரிசு கொடுத்து
புத்தாடை அணிந்து
சந்தர்ப்பம் பார்த்து
உன்னிடம் நான் என்
காதலை சொல்லவா....
தேவை இல்லை...
எனக்கு காதலர் தினம்...
எப்போதும்
இதயம் கொள்ளாது
அன்பும் பாசமும்
முட்டி மோதிக் கொள்ளும்போது...
உயிரின் இறுதி அணு வரை
துள்ளும்போது....
காதலர் தினம் எனக்கு எதற்கு கண்ணே?