இலக்கணம் பகுதி 3 – தமிழில் தெளிவு

கொடுக்க என்பது தர
கொடுக்காத என்பது தராத
மரம் அன்பது தரு
தளம் என்பது தரை
ஆடைநெய்யும் கருவி தறி
உடுத்துதல் தூய தமிழில் தரி
சாலை போடும் கருநெகிழி தார்
வாழைக்குலையை சொல்வதும் தார்
மனைவிக்கு தமிழ்ச்சொல் தாரம்
கொடுக்காத தூயதமிழில் தாரா
கொடுப்பீர் என்பது தாரீர்
முகப்பூச்சு என்பது அரிதாரம்
பழங்கால இசை ஊதுகுழல் தாரை (தாரை, தப்பட்டை)
தானம் கொடுக்கும் ஒரு செயல் தாரை
கர்ணன் கொடுத்தான் தன் புண்ணியங்களை தாரை வார்த்து
ஒழுங்கின்றி இருப்பது தாறுமாறு
ஆங்கில ஜெட்-லேக் தமிழில் தாரை
(ஜெட்-லேக்=விமானத் தொடர்பயணத்தில் தொடர் பகல் அல்லது தொடர் இரவு- ஆல் வரும் உடல் அயற்சி)
மூடு, அடை எதிர்ப்பதம் திற
விளக்கில் எரிவது திரி
உருவாக்கும் சணல் சுழல் திரி
கயிறு உருவாக்கு எனில் திரி
மதிப்புக்கு ஒரு சொல் திரு
காட்சி மூடும் தொங்கு துணி திரை
காட்சி இடுவது துணியில் என்பதால் அது திரைப்படம்
மன்னர் காலத்து கப்பம் திறை
(பலசாலி மன்னன் அடங்கும் மன்னனிடம் செய்யும் ஒரு வகை கட்டாய வசூல்)
முடிவு எனிலது தீர்வு
முடிவு நிலை வெளிப்பாடு தீர்ப்பு
முடிய (இல்லாமல் செய்ய) எனில் அது தீர
உதாரணம்: ஆசை தீர அனுபவிப்பது, நோய் தீர மருந்து அளிப்பது
முடியாமல் (அடங்காமல்) எனிலது தீரா
உதாரணம்: தாகம் தீரா தொண்டை தண்ணீர் கேட்கும்
தீரா சோகம் நெஞ்சை அடைக்கும்
எதிர்குணம் எனில் அது துர்
(துர்சம்பவம், துர்மரணம்,(அகால மரணம்) துர்- அதிர்ஷம்
மன-லயம் தடு எனில் துற
(குடும்ப வாழ்வை துறந்து சந்நியாசம்)
எஃகு மேல் கழிபடலம் துரு
(இரும்பில் பிடிப்பது துரு)
தேங்காயை பூவாய் உதிர் எனில் துருவு
குடைந்து கேள்வி கேட்டல் துருவுதல்
செயல்வேகத்தின் சொல்லாடல் துருதுரு
ஆங்கில மேதகு தமிழில் துரை
பகுபட்ட கட்டமைப்பு துறை
பாண்டியனின் தலைநகர் மதுரை
உத்திரப்பிரதேச நகரம் ஒன்று மத்துரா
கிணற்றின் ஆழ்கழிவு தூர்
தொலைவு எனிலது தூரம்
துளிமழை என்பது தூறல்
வசைபாடு எனிலது தூற்று
விதை தூவு என்பதும் தூற்று
(காற்றுள்ளபோதே தூற்றுவது)
வசைபாடி என்பது தூற்றி
புகழ்பாடி என்பது போற்றி
கண்ணில் படுவது தெரிதல்
புதிய சங்கதி மனதில் பதிவது தெரிந்து கொள்வது
மனதில் உள்வாங்கல் புரிதல்
வெடித்து விலகு எனில் தெறி
வீதியின் ஒடுக்கம் தெரு
நெட்டை பவனி வாகனம் தேர்
மாணவ மூளை சோதனைக்கு தேர்வு
போட்டியில் முந்தி நிலைகொள்வது தேர்வது
அடுத்த கட்டநிலை அடைவது தேர்ச்சி
மக்காளாட்சியில்
ஆளுமை நபர்களை அடையாளம் காட்டும் நிகழ்வு தேர்தல்
உடல்நிலை குணமாவது தேறி வருதல் (தேறுவது)
மனதுக்கு இதம்தரும் சொல் எனில் தேறுதல் (ஆறுதல்)
தவளையில் ஒருவகை தேரை
மீனில் ஒருவகை தேறை
துணிச்சல் எனிலது தைரியம்
இன்னும் வரலாம்....