கசக்கிறது நகரம்!

அம்மாவின் மடியில்
அம்புலி கதைகேட்ட நாட்களை
நினைவுகூர்கிறேன்
பஞ்சு மெத்தையில் படுத்து!

கால் தேய நடைபயணம்
சென்ற நாட்களை
அசைபோடுகிறேன்
பள்ளி குழந்தை பேருந்தில்
நகர்வதை பார்த்து!

தென்றல் வந்து என் தேகம்
தொட்ட காலம்போய்
புகை வந்து
புண்ணாக்குகிறது!

காலங்கள் கடந்தும்
வருடங்கள் வசந்தமாகியும்
கசக்கிறது நகரம்!

எழுதியவர் : தேவி நடராஜன் (13-Feb-13, 12:10 pm)
பார்வை : 132

மேலே