கணவனுக்கோர் காதல் கடிதம்.. !!

ஆழ்மனதில் ஆசனமிட்டு
அதிகாரமாய் அமர்ந்தவனே!

உன் அன்பென்னும் அதிகாரம்
என் வாழ்க்கையின் மொத்த அத்தியாயம்..!!

அடிமை என்றாலும் ஆனந்தம் தான்
உன் காதலின் நிழலில் என்றால்..!!

உன்மேல் சாய்ந்து கொண்டு
உன் கை பிடித்து அழுத்திக் கொண்டு
உன்னை காதலிக்கும் சுகம்
உலகையே சுற்றினாலும் கிடைக்காது..!!

உன் அதிகாலை
அணைப்பிற்கு நிகர்
அழகில்லை உலகில்..!!

போதும் போதுமென்றாலும் பேசிக்கொண்டிருப்பேன்
என்னை சுற்றி வளைத்து
வாய் மூடும்
உன் செய்கைக்காக..!!

என் கை ரேகை தேயுமளவிற்க்கு
உன் கைப் பிடித்து நடக்க வேண்டும்..!!
தொலைதூரமும் தெருமுனை தான்
உன்னுடன் நடக்கயில்..!!

நீ தூங்கும் போது
உன் தலை முடி கோதி
நான் உன்னை ரசிப்பது போல்
கவிஞன் கூட நிலவை ரசித்திருக்க மாட்டான்..!!

இரவு முழுவதும் உறங்காமல் இருக்கின்றேன்
எழுந்ததும் நீ சொல்லும் காதலுக்காக..!!

உன்னுடன் இருக்கும் போது பேசுவதை விட
என்னுடன் நீ இல்லாத நேரத்தில் அதிகம் பேசுகிறேன்
உன் புகைப்படத்துடன்..!!

நீ சிந்தும் வார்த்தைகளை சேர்த்து
கோட்டை கட்டி அதனுள் வாழ ஆசை..!!
ஏதாவது பேசிக்கொண்டே இரு
வேறு ஒலிகளை செவிகள் விரும்பவில்லை..!!

எத்தனை முறை வேண்டுமென்றாலும்
கோபிப்பது போல் நடிக்கலாம் - என்
கை பிடித்து
கண் பார்த்து
நீ சொல்லும் செல்ல சமாதானத்திற்காக..!!

உனக்கு என்ன பிடிக்கும் என்று யோசிப்பதே
எனக்கு பிடித்திருக்கிறது
உன்னை பிடித்திருப்பதால்..!!

உயிருள்ளவரை உன் உயிரில் கலந்திருப்பேன்
உயிரில்லை என்றாலும் உன் உணர்வுகளில் நிறைந்திருப்பேன்..!!
என்றும் உன் நிழலாய் இருக்க வேண்டும்
உன்னுள் கலந்தவளாய்..!!

'காதல் ஏன் அழகாக இருக்கின்றது?'
யாரேனும் கேட்டால்
பதிலுறைக்கும் நெஞ்சம்
'நீ இருப்பதால்..!!'

உன்னைக் காதலிப்பதும் என் வாழ்க்கை தான்
கணவனாக நீ..!!

தாலி கூட இன்னும் அழகாகும் அதில்
உன் பெயர் இருந்தால்..!!

பைத்தியமாகிப் போகின்றேனடா
உன் பாதிச் சிரிப்பிலும்..!!

சிந்திப்பதற்கே சிந்தனை இன்றி
உன்னையே சிந்திகின்றேன்..!!

நினைத்துப் பார்க்கும் பொழுதுகளெல்லாம்
உன் காதலில் நனைந்தவைகளே..!!

இளையராஜாவும் இணையம் தேடுவார்
நம் காதலுக்கு இசையமைக்க..!!

பாரதியின் வார்த்தை போல்
காணுமிடமெல்லாம் நீ!
கருவிழியிலும் நீ என்பதால்..!!

கண்களை மூடினாலும்
கை நீட்டிக் காத்திருகின்றாய்
கள்வா நீ! எனக்காக.. எதற்க்காக..?
என் கனவுகளும்
உன்னால் களவாடப்படுகின்றனவோ..!?

பாதைகள் கூட முடியாமல் நீள்கிறது
உடன் வரும் ஆசையில்..
பக்கத்தில் நீ..!!

துக்கங்கள் யாவும் தூரம் செல்கின்றது
அருகில் நீ..!!

எல்லைக்கும் எல்லை உண்டாம்
உன் மேல் கொண்டுள்ள காதலுக்கு மட்டும் ஏனில்லை..?
பிரபஞ்சத்திற்கு எல்லையில்லை..!!

உன்னை ஏன் நான் காதலிக்கின்றேன்..?
என்னை எனக்கு பிடிக்காதிருக்குமா..?

யாவரும் இருந்தாலும் யாருமில்லை என்றொரு உணர்வு
நீ இல்லையென்றால்..!!

உன் முடியும் அடியுமே
என் வடக்கும் தெற்கும்
உன் கைகள் இரண்டும்
என் கிழக்கும் மேற்கும்
ஆம்!
என் உலகம் யாவும்
உன் கைகளுக்குள் அடக்கம்..!!

உன் காதல் யாவும் நானாயிருக்க வேண்டும்
உன் எண்ணங்கள் யாவும் நானாயிருக்க வேண்டும்
உன் செயல்கள் யாவும் நானாயிருக்க வேண்டும்
பெரிய ஆசை மட்டுமல்ல
பேராசையும் கூடத் தான் - ஆனால்
ஆசை கொள்ளாமல் இருப்பதற்கில்லை
அவ்வளவு உன்னைப் பிடித்திருப்பதால்..!!

காலச் சக்கரம் கையில் கிடைத்தால்
முன் ஜென்மம் செல்வேன்
இன்று நீ கிடைக்க
என்ன தவம் செய்தேன் என்றறிந்து
இன்றும் செய்வேன்
இனியும் நீ கிடைக்க..!!

கடலில் கூட அலைகள் அதிகமில்லை
என்றென்னும் அளவிற்கு
நீ அருகில் வரும் பொழுது
என்னுள் ஏன் இத்தனை அலைகள்..?
இன்னுமா புரியவில்லை காதலா?
நீ தான் என் உலகமென்று..!!

காதலிக்கிறேன் கண்ணா!
கடிதத்தில் மட்டுமல்ல
கனமும்..
கனவிலும் - உனக்கான
காத்திருத்தலிலும்
காணும் காட்சியிலும் - உன்னால்
களவு போகும் நினைவினிலும் - உயிர்
கலைந்தாலும்
காற்றில் கலந்து - உன்
சுவாசம் கலந்து
காதலிப்பேன்..!!

எழுதியவர் : sureshema (14-Feb-13, 10:28 am)
பார்வை : 212

மேலே