தமிழா நீ வாழ்க...!

கொழுத்தும் வெயிலில்
சுடச்சுட காபி...

கொட்டும் மழையில்
சில்லென்ற ஐஸ்கிரீம்...

துரத்தும் காற்றில்
அழகாய் நடைப்பயிற்சி...

டீக்கடை பெஞ்சில்
சட்டமன்ற காட்சி...

அரசியல் விவாதம்
அடுப்பங்கரையிலும் ஆச்சு...

பத்திரிக்கை சினிமாவிலும்
தமிழா உந்தன் மாட்சி...

எழுத்திலும் கவிதையிலும்
உன் புகழே இதற்கு சாட்சி...

வேறென்ன சொல்ல
தமிழா நீ வாழ்க...!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (14-Feb-13, 2:18 pm)
பார்வை : 188

மேலே