மழையே எங்கு சென்றாய்
மழையில் நனைந்திட பிடிக்கும்
அந்த மழை நனைத்த மண்வாசம் பிடிக்கும்
அவ்வப்போது இடியும் மின்னலும் இலவசமாய் வந்து போக
காற்றின் உதவியால் மழை என்மேல் முத்தமிட்டு சென்றது
எதிர் பாரா தீண்டல்
எதிர் பாரா பிரிவு
எங்கு சென்றாய் மழையே ?
உன் வருகைக்காய் காத்திருக்கும் மனிதர்கள் பல கோடி