என் உயிர்க்கு உயிரான நண்பனே...!

கடவுளின் அருளால்
நாம் நண்பர்களானோம்
நான் சந்தோசமாக
இருக்கும் போது நீ சிரித்தாய்
நான் துன்புற்ற போது
நீ அழுதாய்
வாழ்கை என்ற எனது பாதையில்
இரு புறமும் பூவாய் முளைத்தாய்
"நட்பூ" என்னும் பூக்களின் மணத்தால்
என்னை உன்னிடம் ஈர்த்தாய்
இரவை பகலாகினாய்
சூரியனைப் போல் வழிகாட்டினாய்
நட்பிற்கு எடுத்துகாட்டாய் விளங்கினாய்
இரண்டம் பெற்றோராகத் திகழ்ந்தாய்
திருக்குறள் போல் இரண்டு வரிகளாய் வந்து
என் உயிரோடு கரைந்து உயிரின் உயிரானாய்


_-_-_-ஹரிகரன்-_-_-_

எழுதியவர் : ஹரிகரன் (14-Feb-13, 8:58 pm)
பார்வை : 516

மேலே