ம. ரமேஷ் சென்ரியுக்கள்

¦
நெற்பயிர்கள்
வானுயர்ந்து நின்றன
செல் கோபுரங்கள்

¦
கடந்த காலமோ
வருங்காலமோ
நம்பிக்கையில்லா கனவு

¦
வெடித்துக்காட்டி
நீதி கேட்கிறது மனசு
இடிந்த கரை

¦
கூட்டுக் குடும்பம்
முக்கியத்துவம் புரிந்தது
விவாகரத்து ஆன பின்

¦
பௌர்ணமி
நிலவுக்கு வழிபாடு
இரவு மின்தடை

எழுதியவர் : கவியருவி ம. ரமேஷ் (18-Feb-13, 9:40 am)
சேர்த்தது : ம. ரமேஷ்
பார்வை : 93

மேலே