சர்தாஜியின் செயலால் ...?
நோய்வாய்பட்டு கிட்டத்தட்ட மரணத்தின் வாயிலுக்கே சென்றுவிட்ட நண்பரை பார்க்க சர்தார் ஒருவர் ஹாஸ்பிடலுக்கு சென்றிருந்தார். நண்பரின் அருகில் போய் நின்றுக் கொண்டிருந்த சர்தார், நண்பரின் நிலைமை திடீரென மிகவும் மோசமாவதை உணர்ந்து என்னவென்று கேட்டார்.
அந்த நிலையில் பேச முடியாத நண்பர் செய்கையால் ஒரு பேப்பரும், பேனாவும் வேண்டுமென கேட்டார். அவசரமாக ஏதோ எழுதி கொண்டிருக்கும் போதே நண்பரின் உயிர் பாதியிலேயே அவரைவிட்டு பிரிந்தது.
சர்தார் அந்த பேப்பரில் தன் குடும்பத்துக்கு ஏதோ முக்கியமான தகவலை எழுதிவிட்டு போயிருக்கலாம், அதை நாம் படிக்கக் கூடாது என நினைத்து அதை மடித்து தன் சட்டை பைக்குள் வைத்துக் கொண்டார். சடங்குகள் எல்லாம் முடிந்து மறுநாள் சர்தார், நண்பர் வீட்டுக்கு போய் துண்டு பேப்பர் விஷயத்தை நண்பர் மனைவியிடம் சொல்லி அதைப் படித்துப் பார்க்க சொன்னார்.
பேப்பரை பிரித்து படித்த நண்பரின் மனைவி மயக்கம் போட்டு கீழேயே விழுந்துவிட்டார், அப்பொழுதுதான் சர்தார் அந்த பேப்பரில் என்ன எழுதியிருக்கிறது என்று பார்த்தார். அதில் "நீ என் ஆக்சிஜன் குழாய் மீது நின்றுக் கொண்டிருக்கிறாய் என்று எழுதியிருந்தது.."