பெட்டிக்குள்ள‌ என்ன இருக்கு?

பேருந்து நிறுத்தத்தில் கந்தசாமி ஒரு அழகிய இரும்புப் பெட்டியுடன் பேருந்துக்காக வெகு நேரமாய் வெறுப்புடன் காத்துக்கொண்டிருந்தார்.

அப்போது அருகில் இருந்த கடைக்காரர் ஒருவர் பொழுது போகாமல் கந்தசாமியிடம் பேச்சுக்கொடுத்தார்.

கடைக்காரர்: ஆமாம், இந்த பெட்டிக்குள்ள‌ என்ன இருக்கு ?

கந்தசாமி: ம்ம்ம்.. கீரிப்பிள்ளை இருக்கு.

கடைக்காரர்: கீரிப்பிள்ளை உங்களுக்கு எதற்கு ?

கந்தசாமி: அதுவா..? தினமும் என் கனவில் பாம்புகள் வருகின்றன. அந்த பாம்புகளைப் பிடிப்பதற்காகத்தான் இந்த கீரிப்பிள்ளை.

கடைக்காரர்: ஆனால் அவையெல்லாம் கற்பனைப் பாம்புகள் தானே?

கந்தசாமி: இதுவும் கற்பனைக் கீரிப்பிள்ளை தான் !

என்று கூறி பெட்டியைத் திற‌ந்து காட்டினார். பெட்டியில் ஒன்றுமே இல்லை !

எழுதியவர் : அரட்டகாயிபன் (19-Feb-13, 9:38 am)
சேர்த்தது : அரட்டகாயிபன்
பார்வை : 280

சிறந்த நகைச்சுவைகள்

மேலே