கைபேசி
என்னோடு எப்போதும் நீ
என்னுல் கலந்து விட்டாய் நீ
நீ இல்லாமல் நான் இல்லை
உன்னை ஓர் நிமிடம் கூட பிரிந்ததில்லை
நீ எப்போதும் என் கைக்குள்
என் அருகினில் என் மார்பினில்
என் தலையனை அருகில்
என் மனம் பரிதவிக்கும்
உன்னைக் காண வில்லைஎன்றால்
உன் சினுங்கலுக்காக காத்திருப்பேன்
எப்போதும் ..........
சிணுங்கிஅழைத்தால் தொட்டுத்தழுவுவேன்
இன்றும் அப்படித்தான்
தொட்டுத் தழுவினேன்
உன் சிணுங்கலின் போது
சாலை வழி பயணத்தின் போது
எதிர்பாராத விபத்து.....
உன்னை விட்டுப் பிரிந்தேன்
கணநேரத்தில் ..............
உன் மூலம் அறிவர்
என் உறவும் நட்பும் ..........
நான் இறந்த செய்தியை ............