எனக்கு வீட்டிற்கு வர வழி தெரியவில்லை !?
கண்ணனின் மனைவி ஒரு பூனை வளர்த்து வந்தாள்.
அது அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதனை எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்று நினைத்தார்.
ஒரு நாள் மனைவிக்குத் தெரியாமல் அந்த பூனையைத் தூக்கி கொண்டு இருபது வீடுகள் தள்ளி எறிந்துவிட்டு வந்தார். வீட்டிற்கு வந்தால் பூனை வாசலில் நின்று கொண்டிருக்கிறது.
அடுத்தநாள் அப்பூனையை அடுத்த தெருவில் விட்டு வந்தார். அன்றும் பூனை அவருக்கு முன்னால் வந்து மாடியில் இருந்து அவரைப் பார்த்துக் கொண்டிருந்தது.
வெறுப்படைந்த அவர் அடுத்த நாள் பூனையைக் காரில் ஏற்றிக் கொண்டு வலது புறம்,இடது புறம் என்று மாறி மாறி நீண்ட தூரம் சென்று பூனையை விட்டு வந்தார்.
சிறிது நேரம் கழித்து கண்ணன் தன் மனைவிக்கு போன் செய்து கேட்டார்,
"உன் பூனை வீட்டிற்கு வந்து விட்டதா?"
"ஆம்" என்று மனைவி சொல்ல
கண்ணன் சொன்னார்,
"போனை பூனையிடம் கொடு... எனக்கு வீட்டிற்கு வர வழி தெரியவில்லை"